தேய்பிறை நிலவைப்பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள்
'பார்த்திபன் கனவு'நாவலில் இவ்வாறு கூறியிருப்பார்:. கீழைக்கடலில் தேய்பிறைச் சந்திரன் ஒரு பொற்கிண்ணத்தைப்போலத் தோன்றினான். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது இதில்தான் அமுதம் வந்ததோ?
நான் என் வீட்டு மாடியிலிருந்து பார்க்கும்போது தேய்பிறை நிலவு கிண்ணம்போலவேதான் காட்சி தருகிறது.ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் நயாகரா நீர்வீழ்ச்சி சென்றபோது அங்கு அனுபவம் வேறாக இருந்தது. என் மகன் 'அதோ பார் நிலா' என்றான். நான்' எங்கே எங்கே' என்று தேடினேன். அவன் காட்டிய திசையில் பார்த்தபோது ஒரு பெரிய விளக்கு போன்ற சாய்ந்த கோணத்தில் நிலவைக்கண்டேன். அந்த உயர்ந்த அட்சபாகையில் நிலவு பொற்கிண்ணம்போல் அல்லாது shade உள்ள விளக்குபோலவே காட்சி தருகிறது. அதனால்தானோ என்னவோ குழந்தைகளின் ஆங்கில பாடல் புத்தகங்களில் பிறை நிலவு சாய்வாக வரையப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைச் சொடுக்கிப்பார்க்கவும் .
அங்கு நிலவு இன்னும் அருகில் இருப்பதாக்க் காண்கிறது. எங்கிருந்து பார்த்தாலும் நிலா அழகுதான். நிலவைப்பற்றிப் பாடாத கவிஞர் உண்டா? எல்லா மொழிக்கவிஞர்களும். இன்பப்பாடலாக இருந்தாலும் துன்பப்பாடலாக இருந்தாலும். துணைக்கு அழைப்பது நிலவைத்தான. நமது விண்வெளிக் கோள்களில். அதிகமாகப் பாடப்பெற்றது நிலவாகத்தான் இருக்கும்.

God ! Amma! "அந்த உயர்ந்த அட்சபாகையில்... " I could only guess this should mean high latitude!
ReplyDelete