சடங்கு
சடங்கு என்கிற தமிழ்ச் சொல்லைப்பற்றி ஒரு நாள் இரவு உறக்கம் வராதபோது சிந்தித்துக்கொண்டிருந்தேன் .
ஷடங்க என்ற வடமொழிச்சொல்லிலிருந்து அது தோன்றியிருக்கலாம் என எண்ணினேன். மறுநாள் காலை கூகுள் தேடலில் என் எண்ணம் உறுதியாயிற்று. வேதாங்கங்கள் ஆறு .அவையே ஷடங்கம் எனப்படுகின்றன .அவை; சிட்சா ,சந்தஸ் ,வ்யாகரணா ,நிருக்தம் ,கல்பம் ஜ்யோதிஷம் என்பவை. இவற்றுள் கல்பம் என்பது வேதம் சார்ந்த செயல்முறைகளை வகுத்துக்கொடுப்பது . அதாவது பிறப்பு முதல் இறுதிவரை செய்யவேண்டிய கர்மாக்களை விளக்குவது .இதன்படி செய்பவை கல்பம் எனப்படும் ஆறங்கத்துள் விளக்கப்பட்டுள்ளதால் அதன் பெயரே சடங்கு (ஆறங்கம்) என்று நிலைபெற்றுவிட்டது .

சடங்கு என்னும் சொல் வெற்றுச் சம்பிரதாயம் ,பொருளற்ற பழக்கம் என்ற பொருளிலேயே பெரும்பாலும் ஆளப்படுகிறது .ஆனால் பல சடங்குகள் காலம் காலமாக பின்பற்றப்படுபவை பொருள்பொதிந்தனவாகவே இருக்கின்றன.
உதாரணத்திற்கு திருமணவிழா அல்லது மற்ற புனித விழாக்களில் முளைப்பாரி எடுத்தலை குறிப்பிடலாம் .பயிர் செழித்து வளருவதுபோல இல்லறம் சிறக்கவேண்டும் ,எடுத்த நல்லகாரியம் ஓங்கி வளரவேண்டும் என்பதன் குறியீடே முளைப்பாரி .
சடங்குகளை செய்யும்போது பொருள் அறிந்த பெரியோரிடம் கேட்டு அறிந்துகொள்வது நல்லது.
சடங்குகள் வெற்று சம்பிரதாயங்கள் அல்ல .அவை நம்மை படிப்படியாக ஆத்மானுபவத்திற்கு அழைத்துச்செல்பவை என்கிறார் பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் (பார்க்க " தெய்வத்தின் குரல் முதல் பாகம் - கர்ம மார்க்கம் -சடங்குகள் )
http://www.kamakoti.org/tamil/part1kural91.htm
http://www.kamakoti.org/tamil/part1kural91.htm