அதில் எள்ளளவும் அய்யமில்லை தூய தமிழ் விரும்பிகள் திரு ப்பாவை படிக்கவும்
"கோதை தமிழ் அறியாதாரை பூமி சுமப்பதும் வம்பே"
என்பது ஒரு பழம்பாடல்
தமிழைக்காப்பதற்கு தனி முயற்சி எதுவும் தேவையில்ல.
வீட்டில் குழந்தைகளிடம் தமிழர்கள் தமிழில் பேசினாலே போதும். பேச்சு வழக்கிலுள்ள சொற்களை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
மற்றொரு விஷயம்- தமிழில் பேசுவது சிறுமை என்று எண்ணுதல் தவறு. பிறமொழிப்புலமையைக் காண்பிக்கும்
இடத்தில் காண்பிக்கலாம்.
தமிழர்கள் கூடும் இடத்தில் தமிழில் பேசுவோமே!
தமிழில் பேசுகையில் அல்லது எழுதுகையில் பிறமொழி ச்சொற்கள் பயன்படுதுவதில் தவறு இல்லை
ஆனால் அவை இயல்பாக இயைந்து வந்த சொற்களாக
இருக்கவேண்டும் -ரயில்,தபால்,ஜன்னல்,கஷாயம், பாத்திரம் ,பூமி,லாபம்,நஷ்டம் என்பவை போல.
இவ்வாறு பிறமொழிச்சொற்கள் இயல்பாக ஒரு மொழியில்
இயைந்து வழஙகுவதால். அம்மொழி வளம் பெற்று விரிவடைகிறது.
ஆங்கில மொழியில் த்ற்பொழுது வழங்கும் ஏராளமான சொற்கள். லத்தீன் ,பிரென்ச் க்ரேக்கம,ஹிந்தி மற்றும் தமிழ்-ஆம்,தமிழ் மொழிகலளிலிருந்து பெறப்பட்டு மாற்றம் பெற்றோ அல்லது அப்படியே எடுத்தோ சேர்க்கப்பட்டவை.
ஆனால்,கவனம்,தமிழர்களே! சாதாரணமாகப் பேசுகையில்
night,evening,rice(சாதத்திற்கு) போன்ற சொற்களை தமிழில் கலந்து பேசுவதைத் தவிர்த்துவிடுஙககள்.
No comments:
Post a Comment